ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்
உள்ளாட்சித் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மாநில தேர்தல் ஆணைய செயலாளர் உள்ளிட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை, பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தற்போது மாநில தேர்தல் ஆணைய செயலாளராக இருக்கும் எஸ். பழனிசாமி, டவுண் பஞ்சாயத்து இயக்குநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக உள்ள எல். சுப்பிரமணியன், மாநில தேர்தல் ஆணைய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக இருந்த அண்ணாதுரை, விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். தஞ்சாவூர் ஆட்சியராக கோவிந்த ராவ், விருதுநகர் மாவட்ட ஆட்சியராக கண்ணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பள்ளிக்கல்வித்துறை ஆணையராக தாமஸ் வைத்யா நியமனம் செய்யப்பட்டுள்ளார். நில சீர்திருத்தத்துறை இயக்குனராக இருந்த கலையரசி, கலை மற்றும் பண்பாட்டுத்துறை இயக்குனராகவும், மருத்துவ பணிகள் தேர்வாணைய தலைவராக, டி.எஸ். ராஜசேகரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியராக இருந்த சிவஞானம், மக்கள் நல்வாழ்வுத்துறை இணை செயலாளராகவும், வேளாண் துறை சிறப்பு செயலாளராக இருந்த முனியநாதன், ஆதி திராவிடர் நலத்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story