திருச்சி: பல கோடி மதிப்பிலான 20 கிலோ தங்கம் பறிமுதல்
மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து கடத்தி வரப்பட்ட 20 கிலோ தங்கத்தை திருச்சி விமான நிலையத்தில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
வெளிநாடுகளில் இருந்து தங்கம் எடுத்துவரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து துபாய், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்த பயணிகளின் உடமைகளை அதிகாரிகள் விடிய விடிய சோதனை செய்தனர்.100 பயணிகள் உடமைகளில் 20 கிலோ தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் இது தொடர்பாக 100 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பாக 15 பேரை ரகசிய இடத்தில் வைத்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. விசாரணைக்கு பிறகே கடத்தலில் ஈடுபட்டது யார், அதன் பின்னணி உள்ளிட்ட முழு விவரங்கள் தெரியவரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story