தொடர் மழை - நிரம்பும் அணைகள்
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை காரணமாக அணைகளின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.
சத்தியமங்கலம்
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. தற்போதையை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 101.99 அடியாகவும், நீர் இருப்பு 30.3 டிஎம்சியாகவும் உள்ளது.
பழனி
இதேபோல், பழனியில் கடந்த 2 நாட்களாக பெய்த தொடர் மழை காரணமாக, வரதமாநதி அணை முழு கொள்ளளவான 60 அடியை எட்டியது. .
திருவண்ணாமலை
நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கனமழை மற்றும் தென்பெண்ணையாற்றில் அதிகரித்த நீர் வரத்தால், சாத்தனூர் அணையின் நீர்மட்டம் 90 அடியை நெருங்கி வருகிறது.
தேனி
தேனி மாவட்டம் முழுவதும் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக வைகை அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 4 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் நீர்மட்டம் 64 அடியை எட்டியுள்ளது.
Next Story