ஈரோட்டில் களைகட்டும் தீபாவளி ஜவுளி வியாபாரம்
தீபாவளி நெருங்கும் நிலையில், ஈரோட்டில் ஜவுளி வியாபாரம் களைகட்டியுள்ளது.
கனி மார்க்கெட், ஜவுளிச் சந்தை வளாகம், சென்ட்ரல் தியேட்டர் பகுதி, திருவேங்கடம் வீதி, ஈஸ்வரன் கோயில் வீதி ஆகிய பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட புதிய கடைகள் முளைத்துள்ளன. ஆடைகளை வாங்க கேரளா, கர்நாடகா, ஆந்திர மாநில மற்றும் வடமாநில வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர். சிரல், நெகமம், கோவை, மற்றும் காஞ்சி காட்டன் சேலைகள் பெண்களை ஈர்த்துள்ளது. கொல்கத்தாவில் இருந்து களமிறங்கிய சேலைகளும் அதிக வரவேற்பை பெற்றுள்ளது. தேனி, திண்டுக்கல், கரூர், மும்பை, பெங்களூர், கல்கத்தா ஆகிய பகுதிகளில் வந்துள்ள புதிய ரக கைத்தறி துணிகள் பொதுமக்களை கவர்ந்துள்ளது. புதிய ஆடைகள் கிடைப்பதால் பொதுமக்களும், கூடுதல் விற்பனையால் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story