நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு - சென்னை மாணவருக்கு நிபந்தனை ஜாமின்
நீட் ஆள்மாறாட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட சென்னை மாணவருக்கு, உயர்நீதிமன்ற மதுரை கிளை நிபந்தனை ஜாமீன் வழங்கி உள்ளது.
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கில் சென்னையைச் சேர்ந்த மாணவன், அவரின் தந்தை வெங்கடேசன் ஆகியோரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் முன் ஜாமின் கோரி சென்னை மாணவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். மாணவன் கைதை தொடர்ந்து, அந்த மனு ஜாமின் மனுவாக மாற்றப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், சென்னை மாணவனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கினார். தினமும் காலை 10 மணி 30 நிமிடத்திற்குள் மதுரை சிபிசிஐடி அலுவலகத்தில் டி.எஸ்.பி.முன்பாக ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என உத்தரவிட்டார். மாணவனின் வயதையும், எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு ஜாமின் வழங்கப்படுவதாக தெரிவித்த நீதிபதி சுவாமிநாதன், மருத்துவர் வெங்கடேசன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தார்.
Next Story