அம்மு யானையை காட்டுக்குள் விடுவது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே குடியிருப்பு பகுதியில் சுற்றி திரிந்த குட்டி யானை அம்முவை, காட்டுக்குள் விடுவது குறித்து 17ம் தேதிக்குள் அறிக்கை அளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே குடியிருப்பு பகுதியில் சுற்றி திரிந்த குட்டி யானை அம்முவை, காட்டுக்குள் விடுவது குறித்து 17ம் தேதிக்குள் அறிக்கை அளிக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யானையை காட்டுக்குள் விடுவதற்கு தடை கோரி தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அமர்வு, மூன்று மாத குட்டி யானை தனக்கான உணவை தேட முடியாது என்பதால் அதற்கு ஏதேனும் நிகழ்ந்தால் அரசு பொறுப்பேற்குமா என்றும் கேள்வி எழுப்பியது.
Next Story