சென்னையில் திருப்பதி குடை ஊர்வலம் - அக்.4ல் திருமலை சென்றடையும் என தகவல்
புரட்டாசி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, சென்னையில் இருந்து திருமலை ஏழுமலையான் கோயிலுக்கு, வெண்பட்டு குடைகள் ஊர்வலமாக புறப்பட்டது.
புரட்டாசி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு, சென்னையில் இருந்து திருமலை ஏழுமலையான் கோயிலுக்கு, வெண்பட்டு குடைகள் ஊர்வலமாக புறப்பட்டது. பூக்கடையில் உள்ள சென்னகேசவ பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜைகளுக்கு பிறகு, திருக்குடை ஊர்வலம் தொடங்கியது. ஏழுமலையானுக்கு நிழல் தரும், 11 அழகிய வெண்பட்டு திருக்குடைகள் வரிசையாக கொண்டு செல்லப்பட்டது. ஊர்வலம் செல்லும் வழியில் திரண்ட பெருமாள் பக்தர்கள், ஏழுமலையான் திருக்குடைகளை தரிசனம் செய்தனர். இந்து தர்மார்த்த சமிதி டிரஸ்ட் சமர்ப்பிக்கும் இந்த குடைகள் அடுத்த மாதம் 4ஆம் தேதி திருமலை சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு, மாட வீதிகளில் வலம்வந்து வஸ்திரம் மற்றும் மங்களப் பொருள்களுடன் திருப்பதி ஜீயர்கள் முன்னிலையில் திருமலை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் முறையாக சமர்ப்பணம் செய்யப்படும் என கோயில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story