நீட் ஆள்மாறாட்டம் : உதித் சூர்யாவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவர் உதித் சூர்யாவை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க தேனி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உதித்சூர்யா மற்றும் அவரது பெற்றோர்களிடம் சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. விஜயகுமார் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. அப்போது அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளில் பெரும்பாலானவற்றிற்கு அவர்கள் மெளனம் சாதித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதில், மகனை மருத்துவராக்க வேண்டும் என்ற ஆசையில் பின் விளைவு குறித்து யோசிக்கவில்லை என்று உதித்சூர்யாவின் தந்தை வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இதேபோல் ஆள்மாறாட்ட விவகாரத்தில் தாம் வேண்டாம் என்று மறுத்ததாகவும், தந்தை தான் தம்மை கட்டாயப்படுத்தியதாகவும் உதித்சூர்யா தெரிவித்துள்ளார். உதித்சூர்யாவின் தாயார் கயல்விழிக்கும் இந்த குற்றத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதைதொடர்ந்து தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, உதித் சூர்யா மற்றும் அவரது தந்தையை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைதொடர்ந்து இருவரும் தேனி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Next Story