குன்னூர் : சாலையில் குட்டிகளுடன் உலா வந்த கரடி
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி - குன்னூர் சாலையில் உள்ள அரவேணு பகுதியில் உணவு தேடி கரடி ஒன்று, குட்டிகளுடன் உலா வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி - குன்னூர் சாலையில் உள்ள அரவேணு பகுதியில் உணவு தேடி கரடி ஒன்று, குட்டிகளுடன் உலா வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னா் தேயிலை தோட்டத்திற்குள் புகுந்த கரடிகள், அங்கிருந்த மரத்தில் ஏறியது. இதனால் தோட்டத்தில் இருந்த தொழிலாளர்கள் ஓட்டம் பிடித்தனர். சிறிது நேரத்திற்கு பின், மரத்தில் இருந்து இறங்கிய அந்த கரடி, தனது 2 குட்டிகளுடன் வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story