நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த வழக்கு : சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றி தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவு
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி அரசு மருத்துவமனையில் மருத்துவப் படிப்பில் சேர்ந்த வழக்கை தமிழக டிஜிபி திரிபாதி, சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.
ஆள் மாறாட்டம் செய்த வழக்கில் மாணவர் உதித் சூர்யா, மும்பையில் பயிற்சி பெற்று நீட் தேர்வு எழுதியதாகவும், பெங்களூரில் நீட் தேர்வுக்காக பயிற்சி பெற்றதாகவும் தேனி போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இந்நிலையில், இந்த வழக்கை தமிழக டிஜிபி திரிபாதி, சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார். உதித் சூர்யாவின் தந்தை சென்னை அரசு ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரியில் தலைமை மருத்துவராக பணிபுரிந்து வந்ததால் தேனி மாவட்ட போலீசார் கடந்த வாரத்தில் ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் மருத்துவர்களிடம் விசாரணை நடத்தினர். தற்போது வரை இந்த வழக்கில் தேடப்பட்டு வரும் மாணவர் உதித் சூர்யா மற்றும் அவருடைய தந்தை வெங்கடேசன் ஆகிய இருவரும் தலைமறைவாக உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story