பின்னலாடை நிறுவன அதிபரிடம் ரூ.60 லட்சம் மோசடி : இடைத்தரகர் கைது
திருப்பூரில் பின்னலாடை நிறுவன அதிபரிடம் 60 லட்ச ரூபாய் மோசடி செய்த இடைத்தரகரை போலீசார் கைதுசெய்தனர்.
திருப்பூரில் பின்னலாடை நிறுவன அதிபரிடம் 60 லட்ச ரூபாய் மோசடி செய்த இடைத்தரகரை போலீசார் கைதுசெய்தனர். குப்புசாமிபுரம் பகுதியை சேர்ந்த பின்னலாடை நிறுவன அதிபர் கார்த்திக்-கிற்கு, சரக்குகளை வாங்கியது தொடர்பாக, இடைத்தரகர் ஜூபின் ஜோசப் 60 லட்சம் ரூபாய் வழங்க வேண்டி இருந்துள்ளது. இதற்கு பதிலாக கார்த்திக்கிடம், தனது வீட்டின் பத்திரத்தை ஜுபின் ஜோசப் வழங்கியுள்ளார். ஆவணங்களை சரிபார்த்தபோது அந்தவீடு ஏற்கனவே மற்றொரு நபருக்கு விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து கார்த்திக் அளித்த புகாரின் பேரில் இடைத்தரகர் ஜூபின் ஜோசப்பை போலீசார் கைதுசெய்தனர்.
Next Story