விருத்தாசலம் : எச்.ராஜா வருகைக்கு கிராம மக்கள் எதிர்ப்பு : போராட்டம்... பரபரப்பு...
விருத்தாசலம் அருகே எச்.ராஜா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
அரியநாச்சி கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. பிரச்சினைக்குரிய இந்த கோயிலில் சிலை பிரதிஷ்டை செய்ய பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா வரவுள்ளதாக கிராமத்தில் போஸ்டர் ஒட்டப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமமக்கள் போஸ்டர் ஒட்டினர். இதனால், இரு தரப்பினர் இடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டதால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். ஆனால், காவல்துறை எச்சரிக்கை, கிராமமக்கள் எதிர்ப்பையும் மீறி எச்.ராஜா ஊருக்குள் நுழைய முயன்றார். அங்கு திரண்ட பொதுமக்கள், எச்.ராஜா காரை வழிமறித்து, கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அமைதியான கிராமத்தில் ஆன்மிகத்தை வைத்து எச்.ராஜா அரசியல் செய்ய முயற்சிப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். இதையடுத்து, எச்.ராஜா கிராமத்திற்குள் செல்லாமல் திரும்பி சென்றார். எனினும், அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் தவிர்க்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Next Story