1 லட்சம் மரக்கன்றுகள் நடும் மெகா திட்டம் : ரூ.198 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு
தமிழகம் முழுவதும் 71 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கான மெகா திட்டத்திற்கு 198 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 71வது பிறந்தாநாளையொட்டி தமிழகம் முழுவதும் 71 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதற்கான முதல் மரக்கன்றை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காமராஜர் சாலையில் உள்ள பாவேந்தர் பாரதிதாசன் சிலை அருகில் நட்டு வைத்து இந்த திட்டத்தினை தொடங்கி வைத்தார். இந்நிலையில், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் 64 லட்சம் மரக்கன்றுகளும், வனத்துறை சார்பில் 7 லட்சம் மரக்கன்றுகளும் நட்டு அதனை பராமரித்திட வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக 198கோடியே 57 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிகளை விரைவில் தொடங்கி குறித்த காலத்திற்குள் முடித்திட வேண்டும் என்று அனைத்து மாவட்ட அதிகாரிகளுக்கும், ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
Next Story