மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கர்நாடக அணைகளில் இருந்து நீர்திறப்பு அதிகரித்துள்ள நிலையில், தற்போது மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 35 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
x
கர்நாடக அணைகளில் இருந்து நீர்திறப்பு அதிகரித்துள்ள நிலையில், தற்போது மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 35 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இன்று காலை 8 மணி நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 116.72 அடியாவும், நீர் இருப்பு 88.33 டி.எம்.சி.யாகவும் உள்ளது. காவிரி ஆற்றில் 18 ஆயிரம் கனஅடியும், கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் முலம் 700 கனஅடியும் நீர் திறக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரிக்கும் நிலையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 2 அல்லது 3 நாட்களில் முழுக் கொள்ளளவான120 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

         


Next Story

மேலும் செய்திகள்