எம்.பி. கனிமொழி வெற்றியை எதிர்த்த வழக்கு : தேர்தல் ஆணையம், கனிமொழி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
தூத்துக்குடி மக்களவை தொகுதி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, இந்திய தேர்தல் ஆணையம், கனிமொழி ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மக்களவை தொகுதி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, இந்திய தேர்தல் ஆணையம், கனிமொழி ஆகியோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி தொகுதி வாக்காளர் சந்தானகுமார் என்பவர் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதில், கனிமொழியின் வேட்புமனு படிவத்தில், சிங்கப்பூர் பிரஜையான அவரது கணவர் அரவிந்தனின் வருமானத்தை பற்றி குறிப்பிடவில்லை என்றும், முழுமையான விவரங்கள் இல்லாத கனிமொழியின் வேட்புமனுவை தேர்தல் அதிகாரி ஏற்றுக் கொண்டது சட்டவிரோதமானது என்பதால், கனிமொழியின் வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம், மனுவுக்கு 2 வாரங்களில் பதில் அளிக்க கனிமொழி மற்றும் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு விசாரணையை 2 வாரத்துக்கு தள்ளி வைத்துள்ளார்.
Next Story