சத்தியமங்கலம் அருகே நூதன மோசடி : மூலிகை மருந்துகள் விற்றோர் ரூ. 15 கோடியுடன் தலைமறைவு

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே 15 கோடி ரூபாய் மோசடி செய்து தலைமறைவான மூவரை, போலீசார் தேடி வருகின்றனர்.
சத்தியமங்கலம் அருகே நூதன மோசடி : மூலிகை மருந்துகள் விற்றோர் ரூ. 15 கோடியுடன் தலைமறைவு
x
கெம்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த தங்கராஜ் என்பவர் மூலிகை மருந்துகள் விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றை சத்தியமங்கலம் வடக்குப் பேட்டை பகுதியில் நடத்தி உள்ளார். அவருடன், மூவர் பங்குதாரர்களாக இருந்துள்ளனர். ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், நாள் ஒன்றுக்கு இரண்டாயிரத்து 500 ரூபாய் வீதம் 100 நாட்களில் இரண்டரை லட்சம் கிடைக்கும் என விளம்பரம் செய்துள்ளனர். இதனால், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருச்சி, சென்னை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஆயிரத்து 300க்கும் மேற்பட்டோர் சுமார் லட்சக் கணக்கில் முதலீடு செய்துள்ளனர். ஆனால், வாக்குறுதி அளித்தபடி, வங்கியில் பணம் செலுத்தவில்லை என தெரிகிறது. இதனால், கட்டிய பணத்தை  திருப்பி கேட்டதால், தங்கராஜ், ஆனந்த், பிரகாஷ் ஆகியோர் தலைமறைவாகினர். புகாரின் பேரில், பங்குதாரர் பிரபாகரன், தலைமறைவான தங்கராஜின் தந்தை துரைசாமி, பொன்னுசாமி உட்பட3 பேரை கைது செய்த போலீசார், மற்றவர்களை தேடி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்