நீர்வரத்து ஓடையில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம் : நீதிமன்ற உத்தரவின் பேரில் அதிகாரிகள் நடவடிக்கை

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரில் நீர்வரத்து ஓடையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகளை அகற்றும் பணி, இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது.
நீர்வரத்து ஓடையில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றம் : நீதிமன்ற உத்தரவின் பேரில் அதிகாரிகள் நடவடிக்கை
x
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகரில் நீர்வரத்து ஓடையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகளை அகற்றும் பணி, இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது. உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவின் பேரில், நீர்வரத்து ஓடையை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 13 கடைகளை, கோட்டாட்சியர் விஜயா தலைமையில், அதிகாரிகள் ஜேசிபி இயந்திரங்களை கொண்டு அகற்றினர். மேலும், நீதிமன்றத்தில் விரைவில் ஆணை பெற்று, மற்ற ஆக்கிரமிப்புகளும் அகற்றப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பணியின்போது அசம்பாவிதங்கள் நடைபெறுவதை தடுக்கும் விதமாக, அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்