மாட்டு சாணத்தில் தயாராகும் விநாயகர் சிலைகள் - சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இருக்காது என உறுதி

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இல்லாத வகையில் நாட்டு மாடு சாணத்தை கொண்டு விநாயகர் சிலைகளை தயாரித்து அசத்தி வருகிறார் விருதுநகரை சேர்ந்த இளைஞர் ஒருவர்.
மாட்டு சாணத்தில் தயாராகும் விநாயகர் சிலைகள் - சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு இருக்காது என உறுதி
x
நாடு முழுவதும் செப்டம்பர் 2-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பல்வேறு வடிவங்களில் ஆங்காங்கே ஏராளமான விநாயகர் சிலைகள் செய்யப்பட்டு வருகின்றன. இரசாயனம் பூசப்பட்ட சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதால் நீர்நிலைகள் மோசமடைவதுடன், சுற்றுச்சூழலுக்கும் மாசு ஏற்படுகிறது. எனவே, சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் நாட்டு மாட்டில் இருந்து கிடைக்கும் சாணத்தில், விநாயகர் சிலைகளை செய்து வருகிறார் விருதுநகரை சேர்ந்த சங்கர் என்ற இளைஞர். இதுபற்றி கருத்து தெரிவித்த சங்கர், மாட்டு சாணத்துடன் முல்தான் மட்டி பவுடர் கலந்து, ஏதாவது ஒரு விதையை சேர்த்து சிறிய அளவிலான சிலைகளை தயாரித்து வருவதாக கூறினார். இந்த சிலைகளை, நீர்நிலைகளில் கரைப்பதால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படாது என்றும், அதில் உள்ள விதையில் இருந்து ஏதாவது செடி உருவாகிவிடும் எனவும் சங்கர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்