கிளாசிக் ரக 500 புதிய பேருந்து சேவை - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்

அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 500 புதிய பேருந்துகள் சேவையை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.
x
சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வத்தை , போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வரவேற்றார். கிளாசிக் என்றழைக்கப்படும்  கழிப்பறை வசதியுடன் கூடிய ஏசி வசதி இல்லாத 15 பேருந்துகளும் இன்று பயணிகள் வசதிக்காக தொடங்கி வைக்கப்பட்டது. சென்னை மாநகர போக்குவரத்து  கழகத்திற்கு 235 பேருந்துகள், அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு 118 பேருந்துகள், விழுப்புரம் கோட்டத்துக்கு 18, சேலம் கோட்டத்துக்கு - 60, கோவை கோட்டத்துக்கு - 16, கும்பகோணம் கோட்டத்துக்கு - 25, மதுரை, நெல்லை கோட்டத்திற்கு தலா 14 புதிய பேருந்துகள் என மொத்தம் 500 புதிய பேருந்துகள் சேவையை மக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.  இன்று தொடங்கி வைக்கப்பட்ட 500 பேருந்துடன் சேர்த்து இதுவரை போக்குவரத்து கழகங்களுக்கு நான்காயிரத்து 381 புதிய பேருந்துகள் வழங்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்