வாகன விதிமீறலில் ஈடுபட்டவர்களிடமிருந்து 2018 ஆம் ஆண்டில் ரூ.65 கோடி அபராதம் வசூல்
சிவகங்கை மாவட்டத்தில் வாகன விதிமீறலில் ஈடுபட்டவர்களிடமிருந்து 65 கோடி ரூபாய் வரை அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் வாகன விதிமீறலில் ஈடுபட்டவர்களிடமிருந்து 65 கோடி ரூபாய் வரை அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வட்டார போக்குவரத்து அலுவலர் கல்யாணகுமார் கூறுகையில், தற்போது வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் கணினி மயமாக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் ஆன்-லைன் சேவைகளை எளிதாக பெறலாம் என்று கூறினார். ஓட்டுநர் உரிமம், வாகன பதிவுச் சான்று போன்றவை பெற இடைத்தரகர்களிடம் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம் என்று எச்சரிக்கை செய்ததுடன், கடந்த ஆண்டில் வாகன விதிமீறல் மூலம் 65 கோடி ரூபாய் வரை வசூல் செய்யப்பட்டுள்ளது என்றும் கல்யாண்குமார் கூறினார்.
Next Story