நடப்பாண்டில் பொறியியல் மாணவர்கள் சேர்க்கை விவரம் வெளியீடு

நடப்பாண்டில் பொறியியல் மாணவர் சேர்க்கையின் இறுதி புள்ளி விவரங்களை தொழில்நுட்ப கல்வி இயக்குனர் விவேகானந்தன் வெளியிட்டுள்ளார் .
நடப்பாண்டில் பொறியியல் மாணவர்கள் சேர்க்கை விவரம் வெளியீடு
x
அதன்படி நேற்று நள்ளிரவு வரை நடந்த மாணவர் சேர்க்கையின், இறுதி நிலவரப்படி இந்த ஆண்டு 82 ஆயிரத்து 595 மாணவர்கள், பொறியியல் படிப்புகளில் சேர்ந்துள்ளனர். 89 ஆயிரத்து 405  இடங்கள் காலியாக உள்ளன.

ஆன்-லைன் வழியில் பொறியியல் மாணவர் சேர்க்கை கடந்த ஒரு மாதமாக நடந்து வந்த நிலையில், சிறப்பு பிரிவின் கீழ் ஆயிரத்து 683 மாணவர்களுக்கும், முதற்கட்ட கலந்தாய்வில் 6 ஆயிரத்து 740 மாணவர்களுக்கும் ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது.

இரண்டாம் கட்ட கலந்தாய்வில் 14 ஆயிரத்து 791 மாணவர்களும், மூன்றாம் கட்ட கலந்தாய்வில் 24 ஆயிரத்து 131  மாணவர்களும், நான்காம் கட்ட கலந்தாய்வில் 30 ஆயிரத்து 702 மாணவர்களும் என மொத்தம் 78 ஆயிரத்து 047 மாணவர்கள் ஒதுக்கீட்டு ஆணைகளை பெற்றனர்.

மேலும்,  கடந்த மூன்று நாட்களாக நடந்த துணைக் கலந்தாய்வு மூலம், 4 ஆயிரத்து 548 மாணவர்களும் கல்லூரி ஒதுக்கீட்டு ஆணைகளை பெற்றுள்ளனர்.

இதன்மூலம் மொத்தம் உள்ள ஒரு லட்சத்து 72 ஆயிரம் அரசு ஒதுக்கீட்டு இடங்களில், 82 ஆயிரத்து 595 இடங்கள் நிரம்பி உள்ளன.கடந்த ஆண்டு 82 ஆயிரத்து 249 இடங்கள் நிரம்பிய நிலையில், இந்த ஆண்டு கூடுதலாக 346 இடங்கள் நிரம்பியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்