ஆதி கும்பேஸ்வரர் கோயிலில் மகா பிரதோஷ விழா - மத்திய மண்டல ஐ.ஜி உட்பட ஏராளமானோர் சாமி தரிசனம்
கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் நேற்று மகா பிரதோஷத்தை ஒட்டி நந்தி பகவானுக்கு பால் தயிர் உள்ளிட்ட நறுமண பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் நேற்று மகா பிரதோஷத்தை ஒட்டி, நந்தி பகவானுக்கு பால், தயிர் உள்ளிட்ட நறுமண பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், உற்சவர் சிவன் மற்றும் பார்வதி ஆகியோர், சிறப்பு அலங்காரத்தில் நந்தி வாகனத்தில் எழுந்தருளினர். இதனை தொடர்ந்து, கோயில் யானை மங்கலம் முன்செல்ல, ஆதி கும்பேஸ்வரர் சுவாமி வீதி உலா வந்தார். இந்த விழாவில் மத்திய மண்டல ஐ.ஜி., வரதராஜூலு உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.
அண்ணாமலையார் கோயிலில் ஆடிப் பிரதோஷ விழா
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆடி பிரதோஷத்தை யொட்டி நேற்று நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. திருவாதிரை நட்சத்திரத்தில் வரும் சோமாக்த பிரதோஷத்தை முன்னிட்டு பெரிய நந்திக்கு மஞ்சள், பால், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம் உள்ளிட்டவைகளை கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் நடைபெற்றன. பிரதோஷ கால அபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story