"அணை பாதுகாப்பு மசோதாவை நிறுத்தி வைக்க வேண்டும்" - அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் வலியுறுத்தல்

அணை பாதுகாப்பு மசோதாவை நிறுத்தி வைக்க வேண்டும் என மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர் நவநீதகிருஷ்ணன் வலியுறுத்தினார்.
அணை பாதுகாப்பு மசோதாவை நிறுத்தி வைக்க வேண்டும் - அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன் வலியுறுத்தல்
x
அணை பாதுகாப்பு மசோதாவை நிறுத்தி வைக்க வேண்டும் என மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர் நவநீதகிருஷ்ணன் வலியுறுத்தினார். இது தொடர்பாக பேசிய அவர், தமிழகத்திற்கு சொந்தமான நான்கு அணைகள் கேரளாவில் இருந்தாலும், அவற்றை பராமரிப்பது, இயக்குவது உள்ளிட்ட பணிகளை தமிழக அரசு மேற்கொண்டு வரும் நிலையில், அணை பாதுகாப்பு மசோதாவின் சில பரிந்துரைகள் தமிழக அரசின் உரிமையை பறிப்பதாக குறிப்பிட்டார். இது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்றும், இந்த விவகாரத்தில் ஒருமித்த கருத்து ஏற்படும் வரை சட்டத்தை நிறைவேற்றாமல் நிறுத்தி வைக்க வேண்டும்  என்றும் நவநீதகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்