தனியார் தோல் நிறுவனத்தின் பெயரில் மோசடி : ரூ15 கோடிக்கும் மேல் ஏமாற்றிய கும்பல் தலைமறைவு

பிரபல தனியார் தோல் நிறுவனத்தின் பெயரில் 15 கோடி ரூபாய்க்கும் மேல் ஏமாற்றிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
தனியார் தோல் நிறுவனத்தின் பெயரில் மோசடி : ரூ15 கோடிக்கும் மேல் ஏமாற்றிய கும்பல் தலைமறைவு
x
பிரபல தனியார் தோல் நிறுவனத்தின் பெயரில் 15 கோடி ரூபாய்க்கும் மேல் ஏமாற்றிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.  அஸ்வக் அகமது, ரபீக், கைசர் ஆகிய மூன்று பேர், ராணிப்பேட்டையில் உள்ள  தோல் பொருட்களை தயாரிக்கும் நிறுவனத்திற்கு தோல்களை சப்ளை செய்ய வேண்டும் என பல தோல் நிறுவனத்திடம் தோல்களை பெற்றுவந்துள்ளனர். பல நபர்களிடம் 15 கோடி ரூபாய் வரை தோல் பொருட்களை பெற்ற இவர்கள், பணத்தை தராமல் ஏமாற்றிவந்த‌தை அடுத்து,  பாதிக்கப்பட்டவர்கள், தனியார் நிறுவனத்தில் நேரடியாக சென்று விசாரித்த போது, மூவரும் அந்த நிறுவனத்தின் பெயரில் ஏமாற்றியது தெரியவந்துள்ளது. இதையடுத்து,   அவர்களால் ஏமாற்றப்பட்ட10க்கும் மேற்பட்டோர்  டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்