கட்டாய ஹெல்மெட் முழுமையாக செயல்படுத்தவில்லை : "அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க நேரிடும்" - நீதிமன்றம்

ஹெல்மெட் விதிகளை முழுமையாக செயல்படுத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
கட்டாய ஹெல்மெட் முழுமையாக செயல்படுத்தவில்லை : அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க நேரிடும் - நீதிமன்றம்
x
கட்டாய ஹெல்மெட் சட்டத்தை அமல்படுத்த கோரி ராஜேந்திரன் என்பவர் தாக்கல் செய்த வழக்கு நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்ரமணியம் பிரசாத் அடங்கிய அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணியாமல் செல்வதை போலீசார் சிலைபோல் நின்று பார்த்து கொண்டு இருப்பதாக குற்றம் சாட்டினர். இதற்கு பதில் அளித்த அரசு தரப்பு வழக்கறிஞர் ஹெல்மெட் அணியாமல் செல்வதால் ஏற்படும் பாதிப்புகளை வாகன ஓட்டிகள் உணராததற்கு போலீசாரை குறை கூற முடியாது என்றார். இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஹெல்மெட் விதிகளை முழுமையாக செயல்படுத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க நேரிடும் என கூறினர். மேலும் டெல்லியில் அனைவரும் ஹெல்மெட் அணியும்போது தமிழகத்தில் ஏன் சாத்தியப் படவில்லை என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் , வழக்கு விசாரணையை வருகிற 26ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்