6 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போனவர் சடலமாக தோண்டியெடுப்பு... கொழுந்தனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்த மனைவி
கடலூரில் 6 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போனவர் அவரது வீட்டின் பின்புறம் சடலமாக தோண்டி எடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் கூழையூரை சேர்ந்த முருகதாசன் என்பவர் ,கடந்த 2013-ம் ஆண்டு வெளிநாட்டிற்கு சென்றுவிட்டு, வீட்டுக்கு திரும்பிய நிலையில் காணாமல் போனார். அதேசமயம் அவரது மனைவி சுமிதா மற்றும் தம்பி சமிர் ஆகியோரும் காணாமல் போனர். முருகதாசன் திரும்பவும் வெளிநாட்டுக்கு சென்றதாக கூறப்பட்டது. இந்நிலையில் முருகதாசனின் பாஸ்போர்ட் வீட்டில் இருந்ததை பார்த்த அவரது தாய், காவல்நிலையத்தில் புகார் செய்தார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், கேரளாவில் தலைமறைவாக இருந்த சுமிதாவையும், முருகதாசனின் தம்பியையும் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் இருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததும், இதனை கணவர் முருகதாசன் கண்டித்ததால் அவரை கொலைசெய்து வீட்டிற்கு பின்புறம் புதைத்ததும் தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், முருகதாசனின் சடலத்தை தோண்டி எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story