ஏற்காடு படகு இல்ல ஏரி கரையில் கிணறு வெட்டி தண்ணீர் திருடி விற்பனை

சேலம் மாவட்டம் ஏற்காடு படகு இல்ல ஏரி கரையில் கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகள் அமைத்து தண்ணீர் உறிஞ்சி, தங்கும் விடுதிகள் மற்றும் உணவகங்களுக்கு விற்பனை செய்வது குறித்து கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் புகார் அளித்தனர்.
ஏற்காடு படகு இல்ல ஏரி கரையில் கிணறு வெட்டி தண்ணீர் திருடி விற்பனை
x
சேலம் மாவட்டம் ஏற்காடு படகு இல்ல ஏரி கரையில் கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகள் அமைத்து தண்ணீர் உறிஞ்சி, தங்கும் விடுதிகள் மற்றும் உணவகங்களுக்கு விற்பனை செய்வது குறித்து கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் புகார் அளித்தனர்.  இதையடுத்து வட்டார வளர்ச்சி அதிகாரி ராமசந்தர் தலைமையிலான அதிகாரிகள், படகு இல்ல ஏரிக்கரையில் ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு ஜி.ஆர்.டி. தங்கும் விடுதி, முத்துக்குமார், மணி, சேர்வராய்ஸ் தங்கும் விடுதி, ஹேப்பி நெஸ்ட் தங்கும் விடுதியை சேர்ந்தவர்கள் கிணறு மற்றும் ஆழ்துளை கிணறு அமைத்து, தண்ணீரை லாரி மூலம் எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து  4 மின்மோட்டார்,  குழாய்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்