அனைத்து லாரிகளுக்கும் வேலை வாய்ப்பு வழங்கக் கோரி எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்தம்

அனைத்து லாரிகளுக்கும் வேலை வாய்ப்பு வழங்கக் கோரி தென்மண்டல எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
அனைத்து லாரிகளுக்கும் வேலை வாய்ப்பு வழங்கக் கோரி எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் வேலை நிறுத்தம்
x
அனைத்து லாரிகளுக்கும் வேலை வாய்ப்பு வழங்கக் கோரி தென்மண்டல எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். மத்திய அரசுக்கு சொந்தமான ஐ.ஓ.சி., பி.பி.சி., ஹெச். பி. சி., ஆகிய எண்ணெய் நிறுவன சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு எரிவாயுவை  கொண்டு செல்லும் பணியில் தென்மண்டல எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தில் உள்ள லாரிகள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. சுமார் 4 ஆயிரத்து 500 எல்.பி.ஜி. டேங்கர் லாரிகளுக்கு வேலை வாய்ப்பு தருவதாக ஒப்புதல் அளித்திருந்த அதிகாரிகள், சுமார் 740 எல்.பி.ஜி டேங்கர் லாரிகளுக்கு வாய்ப்பளிக்காமல் இழுத்தடிப்பதாக சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தை மையமாக வைத்து இன்று போராட்டம் தொடங்குவதால் தென் மாநிலங்களில் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்