மலைப்பாதையில் குட்டியுடன் சுற்றித்திரிந்த யானை : போக்குவரத்து சிறிதுநேரம் பாதிப்பு
குன்னுார் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் குட்டிகளுடன் காட்டுயானைகள் உணவிற்காக சாலையை கடந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
குன்னுார் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் குட்டிகளுடன் காட்டுயானைகள் உணவிற்காக சாலையை கடந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதில், ஒரு யானை மட்டும் சாலையில் சிறிது நேரம் குட்டியுடன் நின்றது. இதனால், மலைப் பாதையில் இரண்டு புறமும் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சிறிதுநேரத்திற்கு பிறகு அந்த யானை வனப்பகுதிக்குள் சென்றது. தற்போது பலாப்பழம் சீசன் துவங்கியுள்ள நிலையில், காட்டுயானைகள் அவ்வப்போது சாலையை கடக்கும் என்பதால் வாகனங்களை கவனத்துடன் இயக்க வேண்டும் என்றும், புகைப்படம் எடுக்க முயற்சி செய்ய வேண்டாம் என்றும், வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story