ராமேஸ்வரம் : 55 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன சாலை பாலம்... ஆச்சரியத்தோடு பார்த்து செல்லும் மக்கள்

ராமேஸ்வரம் அருகே 55 ஆண்டுகளுக்கு முன்பு புயலால் காணாமல் போன சாலை பாலத்தை, மக்கள் ஆச்சரியத்தோடு பார்த்து செல்கின்றனர்.
ராமேஸ்வரம் : 55 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன சாலை பாலம்... ஆச்சரியத்தோடு பார்த்து செல்லும் மக்கள்
x
ராமேஸ்வரம் அருகே 55 ஆண்டுகளுக்கு முன்பு புயலால் காணாமல் போன சாலை பாலத்தை, மக்கள் ஆச்சரியத்தோடு பார்த்து செல்கின்றனர். ராமேஸ்வரம் அருகே உள்ள முத்திராயர் சத்திரத்திலிருந்து தனுஷ்கோடி வரை 1964 ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதிக்கு முன்பு வரை,  மிகப் பெரிய சிமெண்ட் குழாய்கள் அமைத்து அதன் மீது கான்கீரிட் சாலை அமைத்து இருபுறமும் கடல் நீர் சென்று வரும் வகையில் பாலம் அமைக்கப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வந்துள்ளது. இந்த நிலையில் 1964 டிசம்பர் 23 ஆம் தேதி இரவு ஏற்பட்ட பெரும் புயலின் காரணமாக தனுஷ்கோடி நகரமே முற்றிலும் அழிந்தது. மிகப் பெரிய கட்டடங்கள், தேவாலயங்கள், மருத்துவமனை, பள்ளிகள்  என அனைத்தும் கடலில் அடித்துச் செல்லப்பட்டது. இதேபோன்று, முத்திராயர் சத்திரம் முதல் தனுஷ்கோடி வரையிலான சாலை பாலமும் கடல் நீரால் முடப்பட்டு, பாலம் இருந்ததற்கான அடையாளமே தெரியாத வகையில் காணப்பட்டது.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக தனுஷ்கோடி தென் கடல் பகுதியில் பலத்த காற்றால், கடல் சீற்றமாக காணப்படுகிறது.  இந்த நிலையில் 55 ஆண்டுகளாக கடலுக்குள் மணல் மூடி கிடந்த பாலத்தை தற்போது தெளிவாகக் காண முடிவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இப்பாலம் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது எனவும் மக்கள் தெரிவித்தனர்.

Next Story

மேலும் செய்திகள்