பருவமழை பொய்த்ததால் மா சாகுபடி பாதிப்பு : தமிழக அரசு உதவிட, விவசாயிகள், தொழிலாளர்கள் கோரிக்கை

தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் பருவமழை பொய்த்ததால் மா சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளும், மாங்கூழ் தயாரிக்கும் தொழிலாளர்களும் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பருவமழை பொய்த்ததால் மா சாகுபடி பாதிப்பு : தமிழக அரசு உதவிட, விவசாயிகள், தொழிலாளர்கள் கோரிக்கை
x
தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் 50 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில், மா சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது, பருவமழை பொய்த்ததால், சாகுபடி பாதிக்கப்பட்டு, மா பழங்கூழ் அரவை தொழிற்சாலைகளுக்கு 4 லட்சம் டன்னாக இருந்த மா வரத்தானது, ஒரு லட்சம் டன்னாக குறைந்துள்ளது. இதனால் மா விவசாயிகள், அரவை தொழிற்சாலைகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் செய்து வந்த தொழிலாளர்கள் என 3 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதனிடையே, தொழிலாளர் நலன் காக்க, ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும், அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு சத்துணவுடன் சேர்த்து மாங்கூழ் வழங்க தமிழக அரசு ஆவணம் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாங்கூழ் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்