ஸ்ரீவில்லிபுத்தூர் : நிதி நிறுவனம் நடத்தி ரூ.40 லட்சம் மோசடி
ஸ்ரீவில்லிபுத்தூரில் நிதிநிறுவனம் நடத்தி 40 லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்தவர்களிடம் இருந்து தங்கள் பணத்தை மீட்டுத் தர வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் நிதிநிறுவனம் நடத்தி 40 லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்தவர்களிடம் இருந்து தங்கள் பணத்தை மீட்டுத் தர வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர். நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில், திருவேங்கடம், குருவிகுளம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் ஸ்ரீவில்லிபுத்தூரில் செயல்பட்டு வந்த தனியார் நிதி நிறுவனத்தில் பணம் கட்டி வந்துள்ளனர். 5 ஆண்டுகள் பணம் செலுத்தி வந்த நிலையில் திடீரென அந்த நிறுவனம் மூடப்பட்டது தெரியவந்தது. சுமார் 40 லட்சம் ரூபாய் வரை ஏமாற்றிய அந்த நிதி நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்கள் நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.
Next Story