மதுரை மாவட்டத்தில் உள்ள 1389 பள்ளி வாகனங்களின் தரம் ஆய்வு - ஆய்வை ஆட்சியர் பார்வையிட்டார்
மதுரை மாவட்டத்தில் உள்ள 1389 பள்ளி வாகனங்கள், மாவட்ட ஆட்சியர் நாகராஜன் தலைமையில் டி.ஐ.ஜி பிரதீப்குமார், எஸ்.பி.மணிவண்ணன் மற்றும் வட்டார போக்குவரத்து கழக அதிகாரிகள் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள 1389 பள்ளி வாகனங்கள், மாவட்ட ஆட்சியர் நாகராஜன் தலைமையில் டி.ஐ.ஜி பிரதீப்குமார், எஸ்.பி.மணிவண்ணன் மற்றும் வட்டார போக்குவரத்து கழக அதிகாரிகள் ஆகியோர் ஆய்வு செய்தனர். அனைத்து விதிமுறைகளும் வாகனங்களில் கடைபிடிக்கப்படுகிறதா என ஆய்வு செய்யப்பட்டது. மேலும் பள்ளி வாகன ஓட்டுனர்களுக்கு தீயணைப்புத்துறை சார்பில் விபத்து விழிப்புணர்வு பயிற்சியும் அளிக்கப்பட்டது. ஆய்வுக்கு பின் செய்தியாளர் சந்தித்த ஆட்சியர் நாகராஜன், வாகனங்கள் தரம் குறித்து ஆய்வு செய்து சான்றிதழ் வழங்கப்படுகிறது என்றும், தரம் இல்லாத வாகனங்களை பயன்படுத்த கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
பள்ளி வாகனங்களின் தரம் குறித்து ஆய்வு :
தனியார் பள்ளிகளில் இயக்கப்படும் வாகனங்களின் தரம் குறித்து இன்று ஆய்வு நடத்தப்பட்டது. கோவை காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் பள்ளி வாகனங்களின் தரம் குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆண்டு தோறும் கூட்டாய்வு நடத்துவது வழக்கம். இதன் ஒரு பகுதியாக கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகம் மற்றும் பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் பள்ளி வாகனங்களுக்கான கூட்டாய்வு இன்று துவங்கியது. கோவையில் நடந்த ஆய்வினை, மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணி நேரில் பார்வையிட்டார். ஆய்விற்கு பின் பேட்டியளித்த ஆட்சியர் ராசாமணி, விதிகளை மீறி வாகனங்களை இயக்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
பொள்ளாச்சியில் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த அதிகாரிகள் :
பொள்ளாச்சியில் போக்குவரத்து அதிகாரிகள் 300க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தனர். கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 3 ஆம் தேதி பள்ளிகள் திறக்க உள்ள நிலையில், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. பள்ளி பேருந்துகளில் அவசரகால முதல் உதவி பெட்டி, ஜன்னல்களில் இடைவெளி ஆகியவை சரியாக உள்ளதா என்று அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஆய்வுக்கு உட்படுத்தப்படாமல் பள்ளி வாகனங்களை இயக்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வட்டார போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story