மளிகை கடைக்கு வந்த மனநலம் பாதித்த சிறுமி பாலியல் பலாத்காரம்... 75 முதியவர் மற்றும் மகன் கைது
வேலூரில் தனது மளிகை கடைக்கு வந்த மன நலம் பாதிக்கப்பட்ட சிறுமியை, மகனுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த, 75 வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வேலூர் மாவட்டம் திருப்பத்தூரை அடுத்த புலிக்குட்டை கிராமத்தை சேர்ந்த 75 வயது முதியவர் வெங்கடாச்சலம் தனது மகன் கிருஷ்ணனுடன் சேர்ந்து மளிகை கடை நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில், கடைக்கு பொருள் வாங்க வந்த மன நலம் பாதிக்கப்பட்ட13 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்து சென்ற முதியவர் வெங்கடாச்சலம், தனது இச்சைக்கு பயன்படுத்தியதாக தெரிகிறது. இதேபோல, வெங்கடாச்சலத்தின் மகன், கிருஷ்ணனும், சிறுமியை பலாத்காரம் செய்துள்ளார். இந்த நிலையில், சிறுமியின் தோழி, நடந்த சம்பவத்தை சிறுமியின் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதிர்ச்சியடைந்த பெற்றோர், திருப்பத்தூர் மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து, முதியவர் வெங்கடாச்சலம் மற்றும், அவரது மகன் கிருஷ்ணனை பிடித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story