கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் : குளுகுளு சீசனால் நிரம்பி வழியும் தங்கும் விடுதிகள்
குளுகுளு சீசன் மற்றும் கோடை விடுமுறையை கொண்டாட ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் குவிந்து வருகின்றனர்.
கொடைக்கானல் பகுதியில் தற்போது குளுகுளு சீசன் களைகட்ட தொடங்கி உள்ளது. கோடை விடுமுறையை ஒட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். சுற்றுலா இடங்களுக்கு செல்லும் சாலை ஒருவழி சாலையாக மாற்றப்பட்டதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் குறைந்து காணப்படுகிறது. ஏரியில் உற்சாகமாக படகுசவாரியில் சுற்றுலாப் பயணிகள் ஈடுபட்டனர். பிரையன்ட் பூங்காவில் புதிதாக பூத்துள்ள ஆயிரக்கணக்கான மலர்களையும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர், ஏரியை சுற்றி சைக்கிள் சவாரி, குதிரை சவாரியும் களைகட்டியிருக்கிறது.
Next Story