"காவிரி தீர்ப்புக்கு அநீதி விளைவிக்கிறார் ராகுல் காந்தி" - எடப்பாடி பழனிசாமி

திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் கூட, ஸ்டாலின் முன்மொழிந்ததுள்ள பிரதமர் வேட்பாளரான ராகுல் காந்திக்கு ஆதரவு அளிக்கவில்லை என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
x
ஈரோடு தொகுதி அதிமுக வேட்பாளர் மணிமாறனை ஆதரித்து, காங்கேயம் பகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தில் ஈடுப்பட்டார். அப்போது பேசிய அவர், காங்கேயத்தின் சிறப்பாக விளங்கும் காளையின் சிலை, காங்கேயம் மையப்பகுதியில் மிக பிரம்மாண்டமாக அமைக்கப்படும் என்று தெரிவித்தார். சென்னை - திருச்சி எட்டு வழிச்சாலை திட்டம் மத்திய அரசிக் திட்டம் என்றும், இதனால் தமிழகம் வளர்ச்சி அடையும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி கூறினார். காவிரி விவகாரத்தில் சாதகமான தீர்ப்பை அதிமுக அரசு பெற்றதாகவும், அந்த தீர்ப்புக்கு அநீதி விளைவிக்கும் வகையில் ராகுல் காந்தி பேசுகிறார் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார். ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஸ்டாலின் முன்மொழிந்ததை திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் எவரும் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும், இந்திய அளவில் எந்த மாநில கட்சியும் ராகுலுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.



Next Story

மேலும் செய்திகள்