வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக ஒருவர் கைது - போலீசார் தீவிர விசாரணை
நாகையில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கீரைக்கொல்லை தெருவில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. இதையடுத்து அப்பகுதிக்கு சென்று தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த அதிமுக வார்டு செயலாளர் சிங்காரவேலு வீடு வீடாக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது.அவரை கைது செய்த போலீசார் சிங்காரவேலுவிடமிருந்து 59ஆயிரம் ரூபாய் மற்றும் வாக்காளர்களின் பெயர் பட்டியலை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
Next Story