பகவான் கிருஷ்ணர் குறித்து அவதூராக பேசிய விவகாரம் வீரமணி மீது வழக்கு பதிய வேண்டும் - மன்னார்குடி ஜீயர்
பகவான் கிருஷ்ணர் குறித்து அவதூராக பேசிய திராவிடர் கழக தலைவர் வீரமணி மீது வழக்கு பதிய வேண்டும் என்று மன்னார்குடி ஜீயர் வலியுறுத்தியுள்ளார்.
மன்னார்குடியில் உள்ள ராஜகோபாலசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், இவ்வாறு மதத்தை விமர்சனம் செய்வோர் மீது வழக்கு தொடர்ந்தாலும், அவர்கள் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டுக்கொண்டு தப்பி விடுகின்றனர் என்று வருத்தம் தெரிவித்தார்.
Next Story