பொள்ளாச்சி வழக்கு : பெண் உயர் அதிகாரியை நியமித்து விசாரிக்க கோரி மனு
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை பெண் உயர் அதிகாரியை நியமித்து விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவுக்கு ஏப்ரல் 25ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசு, சிபிஐ-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை பெண் உயர் அதிகாரியை நியமித்து விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிடக் கோரி பெண் வழக்கறிஞர்கள் தாக்கல் செய்த மனுவுக்கு ஏப்ரல் 25ம் தேதிக்குள் பதிலளிக்க தமிழக அரசு, சிபிஐ-க்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
வழக்கறிஞர்கள் அஜிதா, ஆதிலட்சுமி லோகமூர்த்தி, சுதா உள்ளிட்ட 6 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை குறிப்பிட்டதன் மூலம், அவரின் அடையாளத்தை பாதுகாக்கும் கடமையில் இருந்து தமிழக அரசு தவறிவிட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இந்த நடவடிக்கை பாதிக்கப்பட்ட பெண்களின் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தவில்லை என்றும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கும், அவர்களின் குடும்பத்திற்கும் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு தவறிவிட்டதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. மேலும் வழக்கை பெண் உயர் அதிகாரியை நியமித்து விசாரிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி தஹில் ரமானி மற்றும் நீதிபதி துரைசாமி அடங்கிய அமர்வு, மனுவுக்கு ஏப்ரல் 25க்குள் பதிலளிக்க தமிழக அரசுக்கு மற்றும் சிபிஐக்கு உத்தரவிட்டது.
Next Story