தேர்தல் பாதுகாப்பு பணிகள் தீவிரம்
தேர்தல் பாதுகாப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 750 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மக்களவை மற்றும் இடைத்தேர்தலை ஒட்டி தேர்தல் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.சென்னையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 750 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பதற்றமான வாக்குச் சாவடிகளாக 450 இடங்கள் கண்டறிப்பட்டுள்ளன.தேர்தல் பாதுகாப்பு பணிக்காக இதுவரை 4 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் சென்னை வந்துள்ளதாகவும், இன்னும் 16 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் முதற்கட்ட தேர்தல் முடிந்ததும் சென்னைக்கு வருவார்கள் எனவும் கூறப்படுகிறது.மேலும், சென்னையில் ஆயிரத்து 230 துப்பாக்கிகள் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சென்னையில் தேர்தல் விதிகளை மீறியதாக இதுவரை 14 கட்சிகளின் மீது 72 வழக்குகள் பதிவாகியிருப்பதாகவும், தேர்தல் பறக்கும் படையினரால் சுமார் 10 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 4.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Next Story