செயற்கை கைகள் பொருத்தப்பட்ட இளைஞர் : அமைச்சர் விஜயபாஸ்கரை சந்தித்து ஆசி பெற்றார் - திருமணத்துக்கு வருமாறு நேரில் அழைப்பு
திண்டுக்கல்லை சேர்ந்த நாராயணசாமி என்ற இளைஞர் மின்கம்பியில் கைவைத்து 2 கைகளையும் இழந்து, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது அவருக்கு 2 செயற்கை கைகள் பொருத்தப்பட்டது.
திண்டுக்கல்லை சேர்ந்த நாராயணசாமி என்ற இளைஞர் மின்கம்பியில் கைவைத்து 2 கைகளையும் இழந்து, சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது அவருக்கு 2 செயற்கை கைகள் பொருத்தப்பட்டது. மேலும், அவருக்கு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அரசு பணி வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் அவருக்கு திருமண ஏற்பாடு நடைபெற்று வருவதை முன்னிட்டு அமைச்சர் விஜயபாஸ்கரை நேரில் சந்தித்த அந்த இளைஞர், தனது திருமணத்துக்கான அழைப்பிதழை கொடுத்து ஆசி பெற்று சென்றார்.
Next Story