பொன்னேரி அருகே ரூ 15 கோடி போலி மருந்து பறிமுதல்
பொன்னேரி அருகே நால்லூரில் நெற்பயிர்களுக்கு தெளிக்கும் காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
பொன்னேரி அருகே நால்லூரில் நெற்பயிர்களுக்கு தெளிக்கும் காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். அந்த மருந்துகளை பதுக்கி வைத்திருந்த கிடங்கிற்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர். 15 கோடி ரூபாய் மதிப்பிலான காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த மீஞ்சூர் காவல்துறையினர் கிடங்கின் மேற்பார்வையாளர் ஜஸ்வந்த் சிங்,மற்றும் காவலாளி ரஹீமின் ஆகியோரை கைது செய்து தலைமறைவான கிடங்கின் உரிமையாளர் ராகுல் சஞ்சயை தேடிவருகின்றனர்.
Next Story