குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள் இடிப்பு : எதிர்ப்பு தெரிவித்து தற்கொலைக்கு முயன்ற மாற்றுத்திறனாளி
திருவள்ளூர் மாவட்டம் சென்னிவாக்கத்தில், குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை இடிக்கும் பணியில் வருவாய் துறை அதிகாரிகள் இன்று ஈடுபட்டனர்
திருவள்ளூர் மாவட்டம் சென்னிவாக்கத்தில், குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகளை இடிக்கும் பணியில் வருவாய் துறை அதிகாரிகள் இன்று ஈடுபட்டனர். வீட்டை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து மாற்றுத் திறனாளி ஒருவர், தனது வீட்டிற்குள் சென்று கதவை பூட்டி கொண்டு தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று அவரை பத்திரமாக மீட்டனர். வீடுகளில் இருந்த பொருட்களை மக்கள் வாகனங்களில் எடுத்து சென்றதை அடுத்து, ஆக்கிரமித்து கட்டப்பட்ட 18 வீடுகளும் இடிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிகாரிகள் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் மீட்கப்பட்டதாக தெரிவித்தனர்.
Next Story