தொடரும் விசைத்தறி தொழிலாளர்கள் போராட்டம் : 40% விசைத்தறி கூடங்கள் இயங்கவில்லை
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்கள் இயங்கி வருகின்றன.
இந்த நிலையில், 75 சதவீத கூலி உயர்வு கோரி கடந்த 4 நாட்களாக விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் உள்ள 40 சதவீத விசைத்தறிகள் இயங்கவில்லை. இதனையடுத்து தமிழக அரசு தலையிட்டு விசைத்தறி தொழிலாளர்களின் பிரச்சினையை தீர்த்து வைக்க கோரி 300க்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் பள்ளிபாளையம் பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story