14 வயது சிறுமியை கடத்திய தையல் தொழிலாளி
பாலியல் தொல்லை புகார்- போக்சோ சட்டத்தில் கைது
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே, 14 வயது சிறுமியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த நபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். வத்தலகுண்டுவைச் சேர்ந்த தையல் தொழிலாளி நாராயணன், சித்தார்பட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு அடிக்கடி சென்றுள்ளார். அங்கிருந்த 14 வயது சிறுமியை அவர் கடத்தியதாக ராஜதானி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் வத்தலகுண்டு சென்ற போலீசார், தையல் தொழிலாளியை பிடித்து சிறுமியை மீட்டனர். சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நாராயணனை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
Next Story