பிரசவத்திற்கு சென்ற பெண் பிணமாக திரும்பிய சோகம் : ரத்த சேமிப்பு இல்லாததால் கர்ப்பிணி உயிரிழப்பு

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் பிரசவத்திற்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்ததால், ஆத்திரமடைந்த உறவினர்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரசவத்திற்கு சென்ற பெண் பிணமாக திரும்பிய சோகம் : ரத்த சேமிப்பு இல்லாததால் கர்ப்பிணி உயிரிழப்பு
x
அப்பாளபட்டியைச் சேர்ந்த கீர்த்தனா, இரண்டாவது முறை கர்ப்பமடைந்ததை அடுத்து, பிரசவத்திற்காக, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பிரசவத்தின் போது அதிகளவு நடத்தப்பட்ட அறுவை சிகிச்சையினால், கீர்த்தனாவுக்கு அதிகளவு ரத்த போக்கு ஏற்பட்டது. இந்நிலையில் மருத்துவமனையில் போதுமான ரத்தம் இருப்பு இல்லாததால், மருத்துவமனை நிர்வாகம் உரிய சிகிச்சை அளிக்காமல், தாமதப்படுத்தியதால், கீர்த்தனா உயிரிழந்தார். கீர்த்தனாவின் உயிரிழப்பை தாங்க முடியாத உறவினர்கள், மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திடீர் போராட்டத்தால், தனியார் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்