சாதியை சொல்லி கணவர் திட்டுவதாக மனைவி புகார்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே காதல் திருமணம் செய்துகொண்ட காவலர், சாதியை கூறி தம்மை கொலை செய்ய வருவதாக மனைவி புகார் அளித்துள்ளார்.
x
தனியார் மருத்துவமனை செவிலியரான ஆர். சி. செட்டியப்பட்டியை சேர்ந்த ரம்யா என்பவர், எம். செட்டியபட்டியை சேர்ந்த காவலர் அருள்குமாரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இருவருக்கும் 7-மாத குழந்தை உள்ள நிலையில், வரதட்சனை மற்றும் சாதியை கூறி கொலை மிரட்டல் விடுப்பதாக, அருள்குமார் மீது ரம்யா புகார் கூறியுள்ளார். கூரான இருப்புக் கம்பியால் தம்மை தாக்கியதாகவும், தடுக்க வந்த தனது தம்பியை ஓட ஓட அடித்து விரட்டியதாகவும் ரம்யா புகாரளித்துள்ளார். ஆனால், அருள்குமார், காவலராக இருப்பதால், காவல் நிலையத்தில் புகாரை ஏற்க மறுத்து, தன் மீது குற்றம் சாட்டுவதாக ரம்யா கூறியுள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்