மனவளர்ச்சி குன்றிய பெண்ணுக்கு பாலியல் தொல்லை
கன்னியாகுமரி மாவட்டத்தில் மனவளர்ச்சி குன்றிய பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற புது மாப்பிள்ளை கைது செய்யப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள பருத்திக்காட்டுவிளை பகுதியில், மனவளர்ச்சி குன்றிய இளம்பெண் ஒருவர், தனது தாயாருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், அந்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று பார்த்தபோது, இளைஞர் ஒருவர் வீட்டினுள் இருந்தார். உடனே, அவரை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில், புங்கறை பகுதியை சேர்ந்த சதீஷ் என்பதும், மனவளர்ச்சி குன்றிய பெண் தனியாக இருப்பதை நோட்டமிட்டு, பலாத்கார முயற்சியில் ஈடுபட்டதையும் ஒப்புக் கொண்டார். கைதான சதீஷுக்கு, இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் நடைபெற உள்ளது குறிப்பிடதக்கது.
Next Story