மின்சாரம் திருட்டு: ஒரு லட்சம் அபராதம் விதிப்பு
மாமல்லபுரம் அருகே மின்சார திருட்டு விவகாரத்தில் தனியார் குளிர்பான கடை உரிமையாளருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மாமல்லபுரம் அருகே மின்சார திருட்டு விவகாரத்தில் தனியார் குளிர்பான கடை உரிமையாளருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோயில் அருகே குளிர்பான கடை வைத்திருப்பவர் கிருஷ்ணன். மின்சாரம் திருடப்படுவதாக வந்த புகாரையடுத்து இவரது கடையில் உள்ள மின்மீட்டரை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது மின்சார மீட்டரில் தில்லுமுல்லு செய்து மின்சாரம் திருடியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கிருஷ்ணனுக்கு ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 755 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டது.
Next Story