12 ஆண்டுகளாக வரி கட்டாமல் இயங்கி வந்த ஓட்டல் - பிரபல நட்சத்திர ஓட்டலுக்கு சீல் வைத்த அதிகாரிகள்

சென்னை ந‌ந்தனத்தில் இயங்கி வந்த பிரபல நட்சத்திர ஹோட்டலை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
12 ஆண்டுகளாக வரி கட்டாமல் இயங்கி வந்த ஓட்டல் - பிரபல நட்சத்திர ஓட்டலுக்கு சீல் வைத்த அதிகாரிகள்
x
சென்னை ந‌ந்தனத்தில் இயங்கி வந்த பிரபல நட்சத்திர ஹோட்டலை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.  கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் ஓட்டல் நிர்வாகம் சொத்துவரியை கட்டவில்லை என குற்றம்சாட்டப்பட்டிருந்த‌து. இது குறித்த வழக்கில், எட்டு வார காலத்திற்குள் 1 கோடியே 51 லட்சத்தை சொத்து வரியாக கட்ட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் உத்தரவிட்டிருந்த‌து. ஆனால் இதுவரை சொத்துவரி கட்டாத‌தால், தண்டோரா மூலம் ஹோட்டலில் இருந்தவர்களை வெளியேற்றிய மாநகராட்சி அதிகாரிகள் ஓட்டலை சீல்வைத்து பூட்டினர். 

Next Story

மேலும் செய்திகள்